ஒப்பம்
(வார்ப்பு இணைய இதழ் 16-11-2009 வெளியான எனது கவிதை)
கையொப்பம் கேட்டார்கள்
அவரவருக்கான காற்றில்
அவரவருக்கான வானத்தில்
பறப்பதற்கு.
நிரப்பபடாத ஒப்பந்த படிமத்தில்
கிழிந்து தொங்கியது வானம்
சுவாசிக்கவும் மிச்சமில்லாத
காற்று.
மறுக்கையில்
நிர்முலமாக்கபட்ட பிடரியில்
வெடித்தது துவக்கு.
ஒன்றன் பின் ஒன்றாக
கையொப்பம் இட்டு நிமிர்கையில்
உடைந்தது சூரியன்.
நன்றி : வார்ப்பு
18 comments:
நல்ல கவிதை வேல்கண்ணா இது.
நண்பரே,
ஒடுக்கப்படலின் வேதனையும் ஏக்கமும் கலந்த வரிகள். அருமை.
//ஒன்றன் பின் ஒன்றாக
கையெப்பம் இட்டு நிமிர்கையில்
உடைந்தது சூரியன்.//
சூப்பர் தோழரே!
இருக்கட்டும், கையொப்பம் என்பதுதானே சரி?
-கேயார்
வாழ்த்துகள் வேல்கண்ணன்
அன்பு பா.ரா-விற்கு முதன்மை வரவுக்கும் கருத்துக்கும் நன்றி
******
நண்பர் கனவுகளின் காதலனுக்கு புரிதலுக்கும் தொடர்தலுக்கும் நன்றி
******
இன்றைய கவிதை தோழர் கேயார் -ன் ஊக்கத்திற்கும் திருத்தியதற்கும் நன்றி
*******
உயிரோடை - வாங்க , ரொம்ப நன்றிங்க ,
கவிதையை போலவே படமும் அருமை. நன்றி கண்ணன்.
ஒடுக்கப்படலின் வேதனையும் ஏக்கமும் கலந்த வரிகள்... super sir.......
தோழி கல்யாணிக்கு நன்றி உங்களின் பாராட்டு எனக்கும் வார்ப்பு குழுமத்திற்கும்(படம்) சாரும்.
நண்பர் ரமேஷ் வாங்க , ரொம்ப நன்றி.
ரொம்ப நல்லா இருங்கு சார்
மண்குதிரைக்கு எனது நன்றியும் அன்பும்
மறுத்தால் இங்கேயும் துவக்குத்தானா !
அழகான வரிகளோடு கவிதை அலட்டிக்கொள்ளாமல் என்னைப்போல.
நன்றி ஹேமா
//மறுத்தால் இங்கேயும் துவக்குத்தானா//
அங்கே துவக்கு என்பதால் இங்கேயும்.
கவிதை அருமை.
நன்றி வாசு
வேல்கண்ணன் ,
வெகுண்டெழுந்து வரும் சொற்கள் கூட உன்னிலிருந்து வெளிவருகையில் கண்ணியம் குன்றாமல் குமுறியழும் லாவகம் கொண்டிருப்பது -உங்களின் சிறப்பு.
வாங்க சத்ரியன், நலமா , உங்களின் கருத்துக்கு மிக்க நன்றியும்
மகிழ்ச்சியும் அன்பும்.
//சத்ரியன், நலமா ? ///
வேல்கண்ணன்,
உங்களின் ஆசிகளுடன் .... நலம்!
//உங்களின் ஆசிகளுடன் .... நலம்!//
என்னது 'ஆசி' யா.... கொஞ்சம் லொள்ளு அதிகம் தான் சத்ரியா.
Post a Comment