மகனே!
சுவரில் மாட்டப்பட்டிருக்கும் இந்த ஓவியம்
பாட்டன் காலத்தியது என்று தாத்தன் சொன்னார்
அவருக்கும்
அவரின் தாத்தன் சொன்னதாம்
அதோ,
ஓவியத்தின் வலது மூலையில் தினவெடுத்த
தோளுடன் இருப்பது உன் பூட்டன்
நடுவில் திசைமுழுக்க பார்வையை
வியாபித்திருக்கிறாரே அவரே, ஆதித்தாய்
முதலில் காணுற்ற போது இந்தளவிற்கு இரைச்சலில்லை
தூரத்திலிருந்து அகவல் ஒலியும் சிற்சில பரபரப்பும் நிலவியது
தாத்தனுக்கு ஒளி ஒலியுடன் வாசனையும் சமீபத்திருந்தது.
என் பால்யத்தில் முதன் முதலாக செல்கள் அரிக்கத் தொடங்கியிருந்தது
இன்று
கரையான்கள் கூடாரமிட்டு இருக்கின்றன
விரைந்து வா
கோடாரி கொண்டு பாளங்களாக பிளந்து எடுப்போம்
----
நன்றி : நிலவெளி ஆசிரியர் குழு
No comments:
Post a Comment