மீன் விற்கும் ஒருத்தியும்
பெருங்காயம் விற்கும் ஒருத்தியும்
ஒரே வீட்டில் இருந்தார்கள்
இவர்கள்
கண்ணயர்ந்தவேளையில்
சுவரில் சாய்ந்திருக்கும்
கூடைகள்
நூகர்தலுக்கு
இடம் வலம் ஏது?
கலந்தேயிருந்தன
வாசனையும் வீச்சமும்
ஆத்திரமோ அவசரமோ
நாள் ஒன்றில் மாறிப்போன
கூடைகளிருந்து கூடுதலாகவே
விற்றும் தீர்த்தன
சமைத்தவர்கள் வீடுகளிலிருந்து
கலந்தே வெளியேறுகிறது
நாசிகள் தேர்ந்தெடுத்து
கொள்கின்றன தேவையானவற்றை
நன்றி : வார்ப்பு
11 comments:
nice sir,
நண்பரே,
உங்கள் கவிதையை புன்னகைத்துக் கொண்டேதான் படித்தேன். கருத்துக்களை எழுதும் போதும் புன்னகை பிரியவில்லை. சிறப்பாக இருக்கிறது.
கவிதை மிக அருமை ...வாசம் வீசுகிறது...தோழரே...
நல்லா இருக்கு கண்ணன்.
எனது அன்புடையவர்களான
நண்பர் மண்குதிரை, நண்பர் கனவுகளின் காதலன், தோழர் கருணாகரசு, தோழி கல்யாணி அனைவருக்கும் நன்றியும் அன்பும்.
வித்தியாசமான சிந்தனை.எனக்கு இப்படியெல்லாம் வருதில்ல எழுத.
கவிதை வாசமாயிருக்கு.
நன்றி ஹேமா
படிம கவிதை போன்று எளிமையான ஒரு மொழியில் அழகு கவிதை
உயிரோடை லாவண்யாவிற்கு மிகுந்த நன்றி
அற்புதம் வேல்கண்ணா!
நன்றி பா.ரா
Post a Comment