எதிர் வினை
சுவரின்
பின்புறங்களில்
காத்துக்கிடக்கிறது
கதவிடுக்குகளின் வழியாக
உள்கசிய காத்திருக்கும்
எனக்கான வெளிச்சபுள்ளிகள்
விடாப்பிடியாக
பிடித்துக் கொண்டும்
குவளை குவளையாக
இருள் அமிலத்தை
ஊற்றி கொண்டிருக்கிறாய்
இன்னுமொரு
நாளில் சிந்தபோகும்
ஒரே ஒரு
பனித்துளியில்
கரைந்துபோகும்
உன் கடலளவு
காதல்.
29.12.2009 உயிரோசை இணைய இதழில் வெளியான கவிதை
நன்றி : உயிரோசை
(இது ஒரு மீள் பதிவு)
10 comments:
நண்பரே,
ஆழமான வரிகள்.
நண்பர்கள் அனைவரிற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
4 - 5 தரமாய் வாசிச்சேன்.ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி விளங்குது கண்ணன்.
இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
மொழி ரொம்ப நல்லா இருக்கு.. முடிவு கொஞ்சம் வேற மாதிரி இருந்திருக்கனும்
//விடாப்பிடியாக
பிடித்துக் கொண்டும்
குவளை குவளையாக
இருள் அமிலத்தை
ஊற்றி கொண்டிருக்கிறாய்//
என்ன பண்றது? சிலபேர் இப்படித்தான் இருக்காங்க. கவிதை ரொம்ப நல்லா இருக்கு கண்ணன்.
கவிதை மிகவும் அழகாக இருக்கிறது....நவீனம்...புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
நண்பர் கனவுகளின் காதலனுக்கு வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி.
************
தோழி ஹேமாவிற்கு வாழ்த்திற்கும் கருத்திற்கும் நன்றி.
************
உயிரோடை லாவண்யாவிற்கு நன்றி.
//முடிவு கொஞ்சம் வேற மாதிரி இருந்திருக்கனும்//
எந்த மாதிரி உயிரோடை.?
***********
தோழி கல்யாணி க்கு நன்றி .
*********
வாங்க கமலேஷ் நன்றியும் வாழ்த்துகளும்.
வணக்கம் நண்பரே!
ஏதோ யாருக்கோ சொல்வது மாதிரியே தெரியுது
ஆனா நல்லாருக்கு
உயிரோசையிலும் பார்த்தேன்
ரொம்ப நல்லா இருக்கு
நண்பர் சதிஷ்க்கு வணக்கம்
//யாருக்கோ சொல்வது //
காதலை சொல்லியே அதிகாரம் செய்யும் அனைவருக்கும் நண்பரே
கருத்திற்கு மிக்க நன்றி
****************
ரொம்ப நன்றி மண்குதிரை
Hello! I invite you to know , visit and comment at my blog. Blue kiss.
Post a Comment