வார்ப்பு குழுமத்தின் படமும் வரிகளும்
ஆதாரமின்றி சுழலும் சக்கரத்தில்
மேலும் கீழுமாய் உருளும் நாகரிகம்
மேடு பள்ளங்களை உருவாக்கி -
சீரமைப்பு நடப்பதாக அறிவித்து -
கொண்டேயிருக்கும் அதிகார ஆளுமைகள்
நிற வேறுபாடின்றி எரிக்கும் நெருப்பு
பிணவாடையில் கரையும் பேரன்பு
ரத்த ஆற்றில் மூழ்கும் மனிதநேயம்
கழிவுகளை உறிஞ்சி கொள்ளும் நிலம்
மேலும் வலியது வெல்லுமென சமாதானங்கள்
இப்படியாக பதிந்த சுவடுகளை காலம்
கடற்கரையில் சிறுமி கூழாங்கற்களை
சேகரிப்பது போல் சேகரிக்கும்
இரைச்சலின்றி.
* படமும் தலைப்பும் வார்ப்பு குழுமத்தை சார்ந்தது
நன்றி : வார்ப்பு
10 comments:
அபாரம் கண்ணன்.காலத்தை விடவும் சிறந்த சாட்சி வேறெது?நாம்தான் நமது வயதுடன் நாட்டின் வயதையும் மாறுதல்களையும் சம்பந்தப்படுத்திக்கொண்டு குழம்புகிறோம்.காலம் நிறைய சிப்பிகளையும் சில முத்துக்களையும் சேகரித்தபடி.
நண்பரே,
அருமையான ஆக்கம்.
காலத்தின் சுவடுகள் அழியாமல்
நீண்ட நாள் ஞாபகத்திலிருக்கும்
கண்ணன்.
மனதிற்குள் சேர்க்கும் கூழாங்கற்கள் சந்தோஷமான துக்கமான விஷயங்கள்கலக்கிப் போகுமே !
//சீரமைப்பு நடப்பதாக அறிவித்து -
கொண்டேயிருக்கும் அதிகார ஆளுமைகள் //
:)
காலச்சுவடுகள் நம்மை அறியாது சேர்ந்து கொண்டிருக்கும்
மீண்டும் அவ்வலை நம் கரைசேர ஞாபகமாய் எதிரொலிக்கும்
அருமையான பதிவு வேல்கண்ணண்
நன்றி
ஜேகே
காலம் நடந்து போகும் சுவடுகளை கவிதையில் காண முடிகிறது..
ரொம்ப நல்லா வந்திருக்கு..
என்னை ஊக்கப்படுத்தும்:
சுந்தர் ஜி
தியாவின் பேனா
கனவுகளின் காதலன்
சந்தனகிருஷ்ணன்
ஹேமா
D.R அசோக்
இன்றைய கவிதை ஜே.கே
கமலேஷ்
அனைவரின் அன்பிற்கும் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றியும் அன்பும்
காலச்சுவடுகளை சிறுமி சேமிக்கும் கற்களுக்கு ஒப்பிடது அழகு. வாழ்த்துகள்
Thanks uyirodai
Post a Comment