பிரமாண்டம் - இவ்வொன்றை வைத்துக்கொண்டு மிரட்டோ மிரட்டு என்று மிரட்டுகிறார்கள். எத்தனை கோடியில் வேண்டுமானால் படம் எடுக்கட்டும். அவைகள் நல்ல படமா இல்லையா என்பதை காலம் தீர்மானிக்கும். ஆனால், அப்படியானவற்றை பார்ப்பது ஒரு தனி மனிதனின் கடமையாக மாற்றாதீர்கள்-மாற்ற நினைக்காதீர்கள். மாற்ற நினைப்பவர்களுக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்
பிரமாண்டம் குறித்து பேராசிரியர் திரு. தொ.பரமசிவம் அவர்களின் கருத்தை இங்கே பதிவு செய்கிறேன்.
பிரமாண்டம் என்பது ஒரு அடையாளம். இயற்கையிலும் பிரமாண்டங்கள் உண்டு. அடையாறு ஆலமரம் இயற்கையில் பிரமாண்டமானது. மற்றவற்றின் இருப்பை நிராகரிக்கக்கூடிய பிரமாண்டம் இயற்கையில் கிடையாது. அந்தப் பிரமாண்டத்தில் நம்முடைய பிரமாண்டத்தைவிடப் பயன்தரக்கூடிய நூறு விஷயங்கள் உண்டு. ஆலமரத்தின் அடியில் இருக்கும் அதன் வேர்களுக்குகிடையில் பாம்புகள் வசிக்கும். அதன் மேற்பகுதி ஆயிரம் பறவைகளின் வாழ்விடம். ஆனால், ஒரு அரண்மனை அப்படியல்ல, மனிதன் ஆக்கிய பிரமாண்டம் என்பது அதிகாரம் சார்ந்த விஷயம். அதிகாரம் என்பது பிரமாண்டங்களை உருவாக்குகிறது. இந்த பிரமாண்டங்கள் எல்லாம் அடுத்த உயிரின் இருப்பையும் வாழ்வையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன.
மேலும் வாசிக்க ...சமயம் , தொ. பரமசிவன் - சுந்தர்காளி வெளியீடு : தென்திசை பதிப்பகம்
நன்றி : தென்திசை பதிப்பகம்
10 comments:
தொ.பரமசிவம் அவர்களின் கருத்து மிகவும் நுண்மையானது.மற்றவற்றை அழிக்காது மற்றெல்லாவற்றிற்கும் பயனளிக்கும் எல்லாமே பிரம்மாண்டமானவை.மற்றவற்றைப் பற்றி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை.அவற்றிற்கு நாம் அளிக்கும் மரியாதை அவற்றைப் புறந்தள்ளி முன்னேறுவதுதான்.
:)
நண்பரே,
பகிர்விற்கு நன்றி.
யாரையும் விட்டுவைக்காம வாசிகிறீங்க போல வேல்கண்ணன்.
நல்ல பகிர்வு..
நன்றி ஜி உங்களின்
வருகைக்கும் ஆறுதலுக்கும்
நன்றி நண்பரே அசோக்
நன்றி நண்பர் கனவுகளின் காதலன்
நன்றி கமலேஷ்.
இன்னும் நிறையவே இருக்கிறது கமலேஷ்
நான் அறியாத எழுத்தும் எழுத்தாளரும்
தேடி தேடி ஓடிக்கொண்டே இருக்கிறேன் முடிந்தபோதெல்லாம்
மிகச்சரி.அக்கறையான பதிவிற்கு நன்றி.
நன்றி சைக்கிள், உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
பயன்பாடுகளால் ஆவது பிரமாண்டம்.
பயனில்லையேல் வெறும் பிண்டம்.
நன்றி வாசன் , உங்களின் வருகைக்கும்
அருமையான வார்த்தைகளுக்கும்
நல்லாவே சொல்லியிருக்கீங்க
Hi great reading yourr blog
Post a Comment