மேல்பூச்சில்லாத சுவர்
சுவரின் நட்ட நடுவில் கடிகாரம்
கடிகார இரு முட்களைக் காணவில்லை
நொடிமுள் மட்டுமே
சுற்றிச் சுற்றி தேடும் இனியும்.
சுவரின் நட்ட நடுவில் கடிகாரம்
கடிகார இரு முட்களைக் காணவில்லை
நொடிமுள் மட்டுமே
சுற்றிச் சுற்றி தேடும் இனியும்.
பசுஞ்சாணம் மெழுகிய வாசல்
வாசலில் வெள்ளைப் பூவொன்று கோலமாய்
கோலப்புள்ளிகள் மறையத்தொடங்கின
பின் வெள்ளைப்பூ அந்தரத்தில் மிதக்கும்.
வாசலில் வெள்ளைப் பூவொன்று கோலமாய்
கோலப்புள்ளிகள் மறையத்தொடங்கின
பின் வெள்ளைப்பூ அந்தரத்தில் மிதக்கும்.
சித்தூசி விழ இடமில்லாத தெருக்கள்
தெருக்கள் முழுக்க இலவச செருப்புகள்
ஒவ்வொரு செருப்பிலும்
மிதவை பலூன்கள்
கட்டப்படும் இலவசமாய்
அந்நாளொன்றில் தெருக்கள் வெறிச்சோடும்.
தெருக்கள் முழுக்க இலவச செருப்புகள்
ஒவ்வொரு செருப்பிலும்
மிதவை பலூன்கள்
கட்டப்படும் இலவசமாய்
அந்நாளொன்றில் தெருக்கள் வெறிச்சோடும்.
நாளையும்
மதி மறைத்த கதிரவன் உதிக்கும்.
மதி மறைத்த கதிரவன் உதிக்கும்.
13 comments:
//பசுஞ்சாணம் மெழுகிய வாசல்
வாசலில் வெள்ளைப் பூவொன்று கோலமாய் //
வேல்கண்ணன்,
அழகியல் பொதிந்த வரிகள்...!
நண்பரே,
அருமையான வரிகள்.
'பசுஞ்சாணம் மெழுகிய வாசல்
வாசலில் வெள்ளைப் பூவொன்று கோலமாய்
கோலப்புள்ளிகள் மறையத்தொடங்கின
பின் வெள்ளைப்பூ அந்தரத்தில் மிதக்கும்'
- இந்த வரிகள் அழகானவை. புலன்களை கரைத்தால் அழகு வெளிப்படுவது கலைக்கே உரிய தனிச் சிறப்போவெனத் தோன்றுகிறது.
ஒவ்வொரு செருப்பிலும்
மிதவை பலூன்கள்...
வெள்ளைப்பூ அந்தரத்தில்
மிதக்கும்.
மிகவும் யோசிக்க வைத்த வரிகள்
கண்ணன்.
ஒவ்வொரு படிமமும் நல்லா இருக்குங்க (நமக்கு புரியலைங்கறது வேற விஷயம்!!)
காலத்தைத் தேடும் முற்கள்
காலத்தைக் கடக்கும் வெள்ளைப் பூ
காலத்தை சூன்யமாக்கும் செருப்பு
காலம் என்பது ஒன்றுமில்லாதது. அதன் வழக்கம் எப்பொழுதும் போல தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கிறது.
கவிதை படித்தபிறகு அப்படித்தான் தோணியது
வாழ்த்துக்கள்
அருமை.. வாழ்த்துகள் நண்பா :-)
அந்தரத்தில் மிதக்கும் வெள்ளைப் பூவும், மிதவை பலுன்கள் கட்டப்பட்ட இலவச (!) செருப்புகளும் இருக்கும் அந்நாளில், மதிமறைத்த கதிரவன் உதிக்கும் வேளையில், நொடிமுள் மட்டுமான அதிவேக வாழ்முறையோடு பிறிதொரு கிரகத்தில் நிரம்பிக் கிடப்போமோ ...
கவிதை காலத்தின் முகத்தில் வன்மையாய் உதைக்கிறது வேல்கண்ணன்.
கவிதைக்கும் அதற்கு ஈடான விமர்சனமும் தந்த நிலாமகளுக்கும் வாழ்த்துக்கள்.
கவிதை அருமை வேல்கண்ணன். வாழ்த்துகளும்
அற்புதமான எழுத்து!!
//
பசுஞ்சாணம் மெழுகிய வாசல்
வாசலில் வெள்ளைப் பூவொன்று கோலமாய்
கோலப்புள்ளிகள் மறையத்தொடங்கின
பின் வெள்ளைப்பூ அந்தரத்தில் மிதக்கும்.//
உண்மைதான்... அருமை வேல் கண்ணன்...
அருமையான வரிகள்.
வேலை பளுவின் காரணமாக இணைய பக்கம் வருவது குறைந்து போனது.
மன்னிக்க... அனேகமாக அடுத்த வாரம் சரியாகும் என்று நினைக்கிறேன்
நன்றி நண்பர் சத்ரியா ...
நன்றி நண்பர் கனவுகளின் காதலன்
நன்றி சைக்கிள் உங்களின் வருகைக்கும் கருத்திற்கும்
நன்றி நண்பர் சந்தனகிருஷ்ணன்
நன்றி நண்பர் ஆதவன்
நன்றி நண்பர் உழவன்
நன்றி நிலா மகள் (உங்களின் புரிதலுக்கும் கருத்துக்கும் மிகுந்த நன்றி)
நன்றி சுந்தர் ஜி
நன்றி தோழி உயிரோடை
நன்றி ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி
நன்றி தோழி ஹேமி
நன்றி நண்பர் பிரியமுடன் பிரபு
(அவரவர் புரிதல் அவரவருக்கே
அனைத்து புரிதலையும் ஏற்று கொள்கிறேன்)
தொடர்ந்து ஊக்கப்படுத்தும் நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும்
Post a Comment