பாலத்தின்
கீழ்
ஓடும் கருஞ்சாக்கடையின்
முனையிலிருந்து மேலெழுந்து
நி
ற்
கி
ற
து
எனது நகரம்
அழுகிய குப்பைகளின்
வீச்சத்துடன்
குழந்தைகள் விளையாடுகிறார்கள்
எனது தெருக்களில்
மாறுபாடுகள் ஏதுமற்று
சங்கொலியின் முடிவில்
இரைச்சலின்றி அணைந்து போகும்
இயந்திரங்களை போல் தனிமையும்.
தேய்ந்து போன
ஒரு போதும் தொலையாத
பகலை போன்ற காலணிகளை
அணிந்து கொள்கிறேன்.
அடுத்த
சங்கொலிக்குள் வாழ்வதற்கு
விரைந்து செல்கிறேன்
தினசரி.
நன்றி : உயிரோசை
20 comments:
vaathukkal kannan thodarnthu ezuthavendum
மிக அழுத்தமான நகரத்தின் காட்சி.அருமை கண்ணன்.சொன்ன உவமைகளும் தனித்வம்.
ஆனாலும் துவங்கி உடனே முடிவுக்கு நகர்ந்த ஒரு விரைவு எனக்குத் தென்பட்டது.
நடுவில் இடம் காலியாக இருப்பதாய் உணர்ந்தேன்.
இந்த தொழிற்சாலையின் சங்கு பலவருடங்களாக இங்கேயதான் இருந்து வந்திருக்கிறது .வாழ்வின் இரு முனைகளையும் ஒரு வட்டமாக செய்து முடிச்சிட்டும் வைத்திருக்கிறது .இரவு வாழ்க்கை வாழ்பவனுக்கு காலையில் கேட்கும் சங்கொலி முடிவு . பகலில் வாழ்பவனுக்கோ மாலையில் கேட்கும் சங்கோலிதான் முடிவு. இடைபட்டதுதான் வாழ்க்கையா ? அல்லது அவகாசமா ?
தப்பின் ஒலிக்கேற்றவாறு கயிற்றின் மேல் ஆடிக்கொண்டிருக்கும் ஒரு சிறுமியைபோல, இந்த சங்கொலி நம்மை ஆட்டுவித்துக்கொண்டிருக்கிறது தானே கண்ணன் ?
மிக அருமை நண்பா !
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
நண்பரே,
மிகவும் அருமை.
பகலைத் தேய்ந்த காலணியாய்
உருமாற்றியதை மிகவும்
ரசித்தேன் கண்ணன்.
நி
ற்
கி
ற
து
சுஜாதாவைத் தொட்டுச்
சென்றது.
தவறாக எடுத்துக் கொள்ள
வேண்டாம். இதை ஒரு பாராட்டாய்ச் சொல்கிறேன்.
எடுத்துக்கிட்ட கருவே அமர்க்களம் கண்ணன்.
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க்கையின் அவலம் ஒவ்வொரு மனிதனையும் சுழற்றியடிக்கிறது. படைப்பாளிதான் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்படுகிறான். பாரதி சொன்னதுபோல் காட்சிப்படுத்தி மனதைக் கசக்கிப்பிழியும் கவிதை. வாழ்தலே வாழ்கை தக்கவைப்பதற்கு.
நல்லாயிருக்கு வேல் :)
அருமை வேல்கண்ணன்.
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய்
மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
ரொம்ப அருமை இருக்கு நண்பா..
நல்லாயிருக்கு Velkannan.
ரொம்ப நல்லாருக்கு வேல்கண்ணன்.
ஜெனோவின் பின்னூட்டமும் மிக அருமை.
//மாறுபாடுகள் ஏதுமற்று...தினசரி// :(
அருமை கண்ணன்...
சங்கொலிகளுக்கிடையே தான் என் வாழ்கையும். இரு சங்கொலிகளுக்கிடையே வேலை. நான்கு சங்கொலிகளுக்கிடையே இல்லறம். இப்படியே தான் போகிறது. இறுதி சங்கு ஊதும் வரை.
நண்பா, அருமை , சுஜாதாவை சாயல் கொண்டு மிக அழுத்தமான் ஒரு கரு எடுத்து புது வருடத்தை தொடங்கி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள்
நன்றி
ஜேகே
மிகுந்த நன்றி அஜயன் ...
நெருக்கடியான நேரத்திலும் என்னை ஊக்கபடுத்தியதற்க்கு எனது அன்பும் நன்றியும்
மிகுந்த நன்றி சுந்தர் ஜி
உங்களின் தளத்தில் என்னை வெகுவாக 'பெருமைபடுத்தியதற்கும்'
//ஆனாலும் துவங்கி உடனே முடிவுக்கு நகர்ந்த ஒரு விரைவு எனக்குத் தென்பட்டது//
அந்த விரைவான முடிவில் இருந்து தான் ஆரம்பிக்கிறேன் ஜி
மிகுந்த நன்றி ஜெனோவா ...
அண்ணன் பா.ரா சொன்னது போல் உங்களின் பின்னூட்டமே மிகுந்த ஆழமாகவும் அருமையாகவும் உள்ளது எனது அன்பும் நன்றியும்
மிகுந்த நன்றி கமலேஷ் ..
மிகுந்த நன்றி ஹரிணி சார் ...
சுந்தர் ஜி தந்த பயத்தையும் பொறுப்பையும் நீங்களும் உணர்த்திவிட்டீர்கள் .. எனது நன்றியும் அன்பும்
மிகுந்த நன்றி அசோக் ...
மிகுந்த நன்றி சத்ரியன்
மிகுந்த நன்றி உழவன் ...
மிகுந்த நன்றி செ. ஜெ...
மிகுந்த நன்றி அண்ணன் பா.ரா
மிகுந்த நன்றி சுகிர்தா
மிகுந்த நன்றி சிவகுமாரன்
(சலித்து தான் போகிறது ... நண்பரே என்ன செய்ய ?)
மிகுந்த நன்றி இன்றைய கவிதை ஜே. கே
நலமா ..?
Post a Comment