அலை பேசிப்பேசி கரைந்து போன கணங்கள்.
அணையிலிருந்து வெளியேறிய நமது சொற்கள்
பாலையிலிருந்து பூக்களை கொய்கின்றன.
நீ கட்டியிருந்தசந்தனம் பூத்த பழுப்பு
நிற மினுமினுப்பு சேலையே
வனதேவதைகளின் உடையென
நம்பினேன்.
இடப்பாதம் மேல் வலப்பாதம் பதிந்திருந்த
உன் அமர்வை பாதரசங்களில் பதியமிடுகிறேன்.
இளங்கீற்றில் பிளந்த நிலவிலிருந்து
வந்து விழும் பார்வையில் பசியாறிய பின்
கள்வெறி கொள்கிறாள் நீலி.
வனப்புகளில் கூத்தாடிய பின்
அவித்த பனங்காய்களின்
வாசம் அடித்தது.
திரண்ட வெக்கையொன்று
நம்மை பிரித்து சென்ற இரவிலிருந்து
பித்தேறி சுற்றித்திரிகின்றேன்.
நன்றி : கல்கி தீபாவளி மலர்.
3 comments:
வாசம் அடித்தது.... !!!
மிக அருமை அண்ணா
இனிய வணக்கம் நண்பரே..
உங்களின் பாதரச தேவதை என் மனதில்
இன்னிசை வார்த்தாள்...
Post a Comment