இசைக்காத இசைக் குறிப்பு
---------------------------------------
-இது இவருடைய முதல் கவித் தொகுப்பு.
நன்றியைத் தவிர வேறேதுவும் முன்னுரை இல்லை. பெருங்கவிகள் யாரும் அணிந்துரையும் தன்னைப் பற்றிய செய்திகளும் ஏதுமற்று
இவர் தம் கவிதைகளையே பேச விட்டுருக்கிறார். பிறமொழி அலங்கார சொற்கள் பெரும்பாலும் இல்லை.. அழுத்தான உணர்வைச்
சொல்லும் எளிதான அழகான தமிழ் சொற்களுக்காகவே இவரை மழைச் சாரலால் வாழ்த்தலாம். கவிதைகளில் நிறைய இடங்களில் மௌனத்தின் பொருமலோசை கேட்கிறது..
மௌனப் புரிதல் கவிதை வெகு அழகான புரிதல். முத்தங்களை சேகரிக்கும்
பெட்டகம்.. போன்று பெரும்பாலும் அழகான அகப்பொருட் கவிதைகள்.
“ பாலத்தின் கீழ் ஓடும்
கருஞ்சாக்கடையின் முனையிலிருந்து
மேலெழுந்து நிற்கிறது எனது நகரம் “ ..
“ பெருங்காதை இளவரசியை மீட்பதற்கு
மிஞ்சியிருப்பது பொய்க்கால் குதிரை...”
“ நித்திரையற்ற இரவு
என் விழிக் கருவளையமாய்...”
“ சிலுவைகளின் மீதான அச்சங்கள்
நடுநிசி விழிப்புகளை தந்து விடுகிறது... “
“ மணலை அள்ளி மூடிய கைகளுக்குள்
குறுகுறுத்து ஓடிக்கொண்டிருக்கிறது நதி...”
“ கழைக்கூத்தாடி சிறுமி காசுகேட்கிறாள்...
செல்லும் பேருந்து வந்துவிட்டது
என்னிடம் இருப்பது ஒன்றுதான்
பயணத்தைத் தொடங்கவில்லை இன்னும் நான்.”
“ எரியும் மரங்களில் கேட்கிறது
வீணை அழும் ஓசை...”
“ கர்ப்பகிரகத்தில் எரிரொலிக்கிறது
கருவறையற்றவளின் விசும்பலோசை..”.
“ தேங்கிய நீரில் காற்றின் அதிர்வட்டம் சொல்கிறது
மழையின் கதை...” ----- என அட்டகாசமான கவிதைக் கூறல்கள் தொகுப்பெங்கும்..
செரிவான இருளறையில் கரும்பூனையின் நகர்தலென சில மறைமுகக் கவிதைகள் நம் கால்களை ரகசியமாய் சுரண்டுகின்றன... வலியின் வீச்சமெடுக்கும் சில கவிதைகள் கொடூரமானதாய் இருக்கிறது.. அவை நவீனக் கவி உருக்கான முயல்வுகளாய் இருக்கலாம்..
ஒரு சில இடங்களில் நீள் கவிதைக்கான முயற்சிகளில் சின்னச் சின்னதாய்
ரசிக்கத்தக்க குறுங்கவிதைகள் கொஞ்சம் பொருந்தாது கோர்க்கப்பட்டுள்ளன...
ஆனால் அவை அத்தனையும் தனித்தனியாக ரசிக்கத்தக்கவையாக இருக்கின்றன என்பது மறுக்க முடியாது..
“ ஒரு சொல் பாதாளக் கரண்டியிலும் அகப்படாத கிணற்றாழங்களில் கசியும் துளை “ ... என்ற இவருடைய கவிதை வரி போல என்னால் உணரப்பட்டவையல்லாது பெரும் பொருட்கள் இவர் தொகுப்புக்குள் உலவுவதாக நினைக்கிறேன்...
நெடுநாள் முன்பே அறிமுகமான நண்பன் என்பதால் என் விமர்சனம் ஏதும்
மனச்சுருக்கம் ஏற்படுத்தாது என நம்பிக்கையுடனும் மனங்கனிந்த
வாழ்த்துக்களுடனும்... ----
கனிமொழி.ஜி.
நன்றி : தோழி கனிமொழி

2 comments:
வலைச்சரம் மூலம் தங்களின் வலைப்பூவினைப் பற்றி அறிந்தேன். வாழ்த்துக்கள்.
Dr.B.jambulingam - உங்களுக்கும் வலைசரத்திறக்கும் நன்றி
Post a Comment