(02.11.2009 உயிரோசை இணைய இதழில் வெளியான எனது கவிதை)
பழுப்பெறிய சுவரில் தெளிக்கிறது
எனக்கான பொழுதுகள்
அதன் நிழலில் கரையத்
தொடங்குகிறது யாரும்
தீண்டாத என் ஓவியம்
சுவரின் பின்புற
தார்ச்சாலையின் கானல்நீரில்
நெளிகிறது என் நிழல்
இறுதிவரை வருவேன் என்றவனும்
நிழலுடன் தங்கிவிட்டான்
இந்த அறைக்குள்ளயே சரியத்
தொடங்கிவிட்டது வெயில்
பேசியே சலித்துவிட்டது சிலந்தி
பிசுபிசுப்பாய் கசிந்தது
புழுக்கத்தின் வீச்சம்
இனி
மெல்ல விழுங்கும் தனிமையின் காமம்
13 comments:
//பிசுபிசுப்பாய் கசிந்தது
புழுக்கத்தின் வீச்சம்
இனி
மெல்ல விழுங்கும் தனிமையின் காமம் //
வேல் கண்ணன்,
சமீபத்தில் எனது நெருங்கிய நண்பர்களிருவர் இணைந்து "தனிமை" என்றொரு குரும்படம் தயாரித்து வெளியிட்டார்கள்.
உங்களின் கவிதை "பிம்பங்களில்லாத அவர்களின் படம்."
அந்தப்படம் "எழுத்துக்களில்லாத உங்களின் கவிதை."
புரிந்துகொள்வது மிக சிரமமாக இருக்கிறது வேல்கண்ணன்.
எனக்கும் புரியும்படி எழுதுங்கோ ... என் புரிதலும் சத்ரியன் அளவே!!
(இதைபடித்து விட்டு சத்ரியனுடன் விவாதித்த பின் எழுதுகிறேன்)
uyirosaiyile vasiththeen nanbare
vazhththukkal
வேல்கண்ணண் அவர்களே
தனிமை நமக்கு கிடைத்த அற்புதம் ஆனால் அது நாள் கழித்து தான் அற்புதம் அந்த சமயத்தில் சித்ரவதை
தான். ரசிக்கும் சமயத்தில் ஏகாந்தம் என்பார்கள்..நன்றாக விவரிதிருந்தீர்கள் எல்லா வரிகளும் நன்றாக இருந்தாலும் ”இறுதிவரை வருவேன் என்றவனும்
நிழலுடன் தங்கிவிட்டான்” என்பதும்
”இனி
மெல்ல விழுங்கும் தனிமையின் காமம் ” எனவும் தனிமையின் வலியை உணர்த்துவதாக பட்டது. நன்றி நன்பரே..
ஜேகே - இன்றைய கவிதை
நண்பரே,
தனிமையின் வேதனை, அதன் புளுக்கத்துடன் இணைந்த வரிகள். சிறப்பாக இருக்கிறது.
ஜே கே அளவிற்கு எனக்கு புரிதல் இல்லை!
கருணாகரசு அவர்களுடன் நான் ஒத்துப் போகிறேன்!
//இனி
மெல்ல விழுங்கும் தனிமையின் காமம் //
எனினும் இந்த வரிகள் கவிதையை
முழுவதுமாய் உணர்த்தி விடுகின்றன வேல் கண்ணன்!
-கேயார்
இன்று வாசித்த மிக நல்ல கவிதைகளில் இதுவும் ஒன்னு,வேல்கண்ணா...ஒன்றுமே இல்லை என நான் உணர்கிற வெளிப்பாடு.உயிரோசைக்கு வாழ்துக்கள்!
நிழல் கூடச் சிலசமயம் எம்மை விட்டு விலகிய நிலையில் தனிமையின் அழுத்தம் சொல்கிறது கவிதை.
நான் புரிஞ்சுகொண்டது சரியா கண்ணன் ?
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்
தனிமையின் வலி தெறிக்கிறது.
நண்பர் சத்ரியனுக்கு நன்றி எனது கவிதையை சிறப்பு செய்யதற்கு நன்றி
உங்கள் நண்பர்கள எடுத்த குறும்படத்தை காண முடியுமா...?
******************************
தோழர் கருணகரசுக்கு நன்றி
//என் புரிதலும் சத்ரியன் அளவே!!//
சத்ரியன் சரியானபடி புரிந்து கொண்டார். பின்பு என்ன தோழா.
******************************
மண் குதிரைக்கு நன்றி
உங்களின் தொடர் கருத்துரைக்கு.
******************************
'இன்றைய கவிதை' நண்பர்
ஜே.கே - க்கு நன்றி.
//ரசிக்கும் சமயத்தில் ஏகாந்தம் என்பார்கள்// உண்மை தான் நண்பா,
**************************
நண்பர் கனவுகளின் காதலுனுக்கு
மிக்க நன்றி. உங்களின் தொடர் வாசித்தல் என்னை ஊக்கபடுத்துகிறது.
***************************
'இன்றைய கவிதை' நண்பர்
கேயார் -க்கு நன்றி
//எனினும் இந்த வரிகள் கவிதையை
முழுவதுமாய் உணர்த்தி விடுகின்றன வேல் கண்ணன்//
இது தான் நண்பா, சரியா தான் இருக்கிறது.
*****************************
பா. ரா அவர்களுக்கு மிக்க நன்றி
உங்களின் வாழ்த்துகளுக்கும் அன்பிற்கும்.
*****************************
தோழி ஹேமா- விற்கு நன்றி
//நான் புரிஞ்சுகொண்டது சரியா கண்ணன்//
அதே தான் ஹேமா.
*****************************
வாங்க சந்ரு , மிக்க நன்றி.
****************************
தோழி கல்யாணி சுரேஷ் -க்கு
நன்றி
வேல்கண்ணன் கவிதை நன்றாக இருக்கின்றது
உயிரோடை லாவண்யாவிற்கு மிக்க நன்றி
Post a Comment