இறுதி வாக்குமூலம்
பிசிறாமல் இழையோடிய குழலின்
ஓசையொன்று என்னுள் விழுந்தது
இறகாய்.
முதலில் இதமாய் வருடிக்கொடுத்த
இறகு பிறகு பாளம்பாளமாய்ப்
பிளந்தது.
நாளங்களில் சுவாசம் அறுந்து
தொங்கியது. செல்கள் அனைத்துமே
சிதைவுற்றது.
பிறப்பின் வழியாக வந்த நான்
திரும்பிச் செல்கிறேன் இவ்வழியாக
இறுக்கம் ஏதுமற்று.
இதுவே
எனது இறுதி வாக்குமூலம்
(ஹரி பிரசாத் சௌராஸியாவிற்கு... )
நன்றி : உயிரோசை
24 comments:
இசையின் உச்சம் கண்ணீர்த்துளிகள்தான்.பிறப்பிலிருந்து பிறவாமைக்கு இட்டுச்செல்லும் இசையைப்போல ஆனந்தம் இந்தக் கவிதையும்.அற்புதம் வேல்கண்ணன்.
நண்பரே,
அருமையான வரிகள்.
இசை...உண்மையிலே உயிரை உயிரோடு இழுத்துச்செல்லும் ஒரு சக்தி!
செளராஸியாவின் குழலோசையை
கண்களால் படிக்கும் சாத்யத்தை
உருவாக்கியிருக்கிறது உங்கள்
கவிதை.
இசையின் உருக்கத்தை அருமையாகச் சொல்கிறது எழுத்து.பாராட்டுக்கள்!
வேல்கண்ணண்,
படைப்புகளிலேயே இசை ஞானம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ரசிக்க வைக்கும், செளராசியாவின் இசை அவர் மூச்சை கொடுத்து நம் மயக்கும் , சைக்கிள் பதிவாளர் கூறியது போல் இசையை எழுதி அதிலும் மயங்க வைத்து வீட்டீர்கள்
நன்றி வேல்கண்ணண்
ஜேகே
நல்ல கவிதை வேல்கண்ணன். வாழ்த்துகள்.
(தொடர்ந்து உயிரோசையில் வருவதற்கும்)
ஆரம்ப வரியை பல முறை வாசிக்கிறேன்.. இன்னும் வாசிக்கவே தூண்டுகிறது.
உயிரோசைக்கு வாழ்த்துகள்!
அருமை வேல் கண்ணன்..ரீங்காரமிட்டு ரசிக்க வைக்கிறது இசை ...உங்கள் கவிதையில்..மேலும் தொடருங்கள்..:-)
அருமையா எழுதியிருக்கிங்க வேல்... இறகாய் பாரமற்று துவங்கும் வரிகள் இறுதியில் பாளம் பாளமாய் வெடிக்கச் செய்கிறது. உயிரையே துறக்கச் சம்மதிக்கும் இசையின் உன்னதத்தை என்ன சொல்ல...!!!
Music melts me until I drip or drop.
சுந்தர் ஜி : அந்த கண்ணீர்த்துளிகள் மட்டுமே வருவதற்கு ஏங்குகிறது மனம். வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ஜி
கனவுகளின் காதலன் : நன்றி நண்பரே , உங்களின் தொடர் ஊக்கத்திற்கு
ஹேமா : நன்றி, ஆம் ஹேமா, இதுவும் ஒரு ஜீவசமாதி தான்.
சந்தானகிருஷ்ணன் : என் மீது தங்கள் கொண்டுள்ள மிகையான அன்பிற்கு நன்றியும் அன்பும்
சைக்கிள் : நன்றி உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் பாராட்டிற்கும்.
இன்றைய கவிதை ஜே.கே : நீங்கள் சொல்வது முழுக்க உண்மை. இசை நம்மை ஆட்கொள்ள அதனை பற்றிய ஞானம் அவசியம் இல்லை தான்.
எவ்வளவு உருகினாலும் இசை இசையே. நன்றி நண்பரே உங்களின் தொடர் வாசித்தலுக்கும் வாழ்த்திற்கும்.
செல்வராஜ் ஜெகதிசன் : உங்களுக்கு நன்றியும் அன்பும். மூன்றாவது கவிதை தொகுப்பிற்கும் வாழ்த்துகள். உயிரோசையால் பெரும் ஊக்கம் கொள்கிறேன். உயிரோசைக்கும் நன்றியும் அன்பும்.
உழவன் : நன்றியும் அன்பும் நண்பரே , உங்களின் வாசித்தலுக்கும் ஊக்கத்திற்கும்.
ஹேமி : நன்றியும் அன்பும் ஹேமி, பெரிதும் மகிழ்கிறேன் உங்களின் வருகைக்கு.
நிலா மகள் : இசையுடன் உயிரை துறக்க மாட்டோமா என்ற பெரும் கனவு எனக்குண்டு. உங்களின் முழு புரிதலுக்கு நன்றி. உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றியும் அன்பும் நிறையவே ...
வாசன் : உங்களின் முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.
Yes, Vasan, It's True also.
சூப்பர்
நன்றி உயிரோடை ...
Post a Comment