இந்த குளத்தில் எறிகிறேன்
ஒழுங்கற்றவைகளாக
ரயிலடி அங்காடித்தெருவை
பேருந்து நிறுத்தத்தை
கடற்கரை மாலையை
பனி இரவுகளை
குளத்திலிருந்துயெழுபவை
வட்டமிடுகின்றன
கனசெவ்வகமாகவும்
எண்கோணமாகவும்
சிறு சிறு கற்களாய் உருமாற்றியது
எறிந்த கற்கள் குளத்தில் மிதக்கின்றன
நானோ காற்றில் கரைந்தவாறு.
நன்றி : உயிர் எழுத்து , நவம்பர் 2012
4 comments:
சொன்ன விதம் அருமை...
சில சுமைகளையும் அப்படி நினைவுகளாய்க் கரைத்துப் பனிக்கட்டிகளாக உறைய வைக்க முடியுமென்றால்.. ஹ்ம்ம்ம்.
nice
வணக்கம்
இன்று உங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள்
பார்வைக்குhttp://blogintamil.blogspot.com/2013/03/blog-post_28.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
Post a Comment