வெக்கைப் பேருந்தினுள் எழுமிச்சைப்
பெண்ணொருவர் பச்சை வெள்ளரியை
முன்பின்பாக நடந்து கூவி விற்கிறார்
மாம்பழ அம்மாவிடம்
கிளை நீட்டி கேட்கிறது வெண்டை பிஞ்சு
எழுமிச்சை இலவசமாகத் தந்த பசேலென்ற
பாம்பைத் தலை வால் கிள்ளித் தருகிறார் மாம்பழம்
ஒடிந்த பாம்பு
வெண்டைப் பிஞ்சின் வாயில் நலுங்குகிறது
விஷவெக்கை முறிந்து
பேருந்தில் குளுமை நிரம்புகிறது
(12B-க்கு)
நன்றி : தி இந்து தமிழ் தீபாவளி மலர் 2019
நன்றி : Jaikumar Mankuthirai , தி இந்து குழுமம்
நன்றி : Jaikumar Mankuthirai , தி இந்து குழுமம்
No comments:
Post a Comment